
அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.

அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.

ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.

நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?

மகத்தான ஒரு நாளுக்காக,

அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்-

ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது

´ஸிஜ்ஜீன்´ என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?

அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும்.

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.

வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.

நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால்,"அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே" என்று கூறுகின்றான்.

அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன.

(தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.

பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள்.

"எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது" என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.

நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும்"இல்லிய்யீ"னில் இருக்கிறது.

"இல்லிய்யுன்´ என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?

(அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும்.